search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே சகோதரி மரணம்: பரோலில் வெளியே வருவாரா, லாலு ?
    X

    ஒரே சகோதரி மரணம்: பரோலில் வெளியே வருவாரா, லாலு ?

    பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் ஒரே சகோதரி இன்று மரணம் அடைந்ததால் இறுதி சடங்குகளில் பங்கேற்க சிறை அதிகாரிகளிடம் பரோல் கேட்டு அவர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முன்னர் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் தொடர்பான இரண்டாவது வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

    இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் நேற்று காலையில் இருந்து லாலுவை நினைத்து கவலைப்பட்ட அவரது ஒரே சகோதரியும், நான்கு வயது மூத்தவருமான கங்கோத்ரி தேவி, லாலுவுக்கு மிக குறைவான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தவாறு இருந்துள்ளார்.

    இந்நிலையில், அவரது தண்டனை விபரத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த கங்கோத்ரி இன்று மரணம் அடைந்தார். அவரது உடலை பாட்னாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளை லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    தனது ஒரே சகோதரியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் செல்ல அனுமதியளிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் ‘பரோல்’ விண்ணப்பம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், இன்று ஞாயிற்றுக்கிழமை சிறை அலுவலகத்துக்கு விடுமுறை என்பதாலும் பரோல் அனுமதி கிடைக்க கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளின் தாமதம் ஆகியவற்றால் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்ளாமல் அவரது சகோதரி கங்கோத்ரியின் உடல் அடக்கம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. #tamilnews #lalu #sisterdeath
    Next Story
    ×