search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்து நாள் சுற்றுப்பயணம்: முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் தாய்லாந்து சென்றடைந்தார்
    X

    ஐந்து நாள் சுற்றுப்பயணம்: முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் தாய்லாந்து சென்றடைந்தார்

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இன்று முதல் கட்டமாக தாய்லாந்தை சென்றடைந்தார். #sushmaswaraj
    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஐந்து நாள்கள் பயணமாக தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

    இந்த சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் இன்று தாய்லாந்தை சென்றடைந்தார். தாய்லாந்தில் இன்றும் நாளையும் தங்கும் அவர், ஆசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்தும், தாய்லாந்து நாட்டுடனான பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    அதைத்தொடர்ந்து, ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் சுஷ்மா சுவராஜ் இந்தோனேசியா செல்கிறார். அப்போது அவர் இந்தியா- இந்தோனேசியா கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

    இதையடுத்து, 7-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் சுஷ்மா சுவராஜ் அங்கு அதிபரை சந்தித்து பேசுகிறார். மேலும், குடியரசு தினத்தில் கலந்துகொள்ள வருமாறும் கேட்டுக் கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த புருனை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #sushmaswaraj #tamilnews
    Next Story
    ×