search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு அதிகாரி தினேஷ்வர் சர்மா இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்
    X

    சிறப்பு அதிகாரி தினேஷ்வர் சர்மா இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்

    காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி தினேஷ்வர் சர்மா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று முதல் 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
    ஜம்மு:

    காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய மந்திரிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. 

    காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் சர்மா, காஷ்மீர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நியாயமான அபிலாஷைகளை அறிந்து கொள்வதற்கு முயற்சிப்பார் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தினேஷ்வர் சர்மா இன்று முதல் 4 நாட்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
     
    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இன்று முதல் தினேஷ்வர் சர்மா மாநில மக்களை சந்தித்து பேசுகிறார். ஜக்தி பகுதியில் காஷ்மீரில் புலம் பெயர்ந்து வாழும் இந்துக்களையும் சந்தித்து பேசவுள்ளார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிய உள்ளார்.
     
    மேலும், நாளையும், ஞாயிற்றுக்கிழமை காலையும் காஷ்மீர் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின், தெற்கு காஷ்மீர் செல்லும் அவர் இளைஞர்களிடம் கலந்துரையாட உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×