search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் விஜய் ருபானி உறுதி
    X

    பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் விஜய் ருபானி உறுதி

    சர்ச்சையில் சிக்கியுள்ள பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி உறுதிபட தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பத்மாவதி பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

    சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.

    இந்நிலையில், ராஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

    அகமதாபத் நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த விஜய் ருபானி, பத்மாவதி பட விவகாரத்தில் பிரச்சனைகள் உள்ளன. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுடன் எங்களது அணுதாபங்கள் சேர்ந்துள்ளது. எனவே, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதி அளிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பேச்சு மற்றும் உணர்வு சுதந்திரத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், வரலாற்றை திரிப்பதையும், நமது மிக உயர்ந்த கலாசாரத்தை களங்கப்படுத்துவதையும் நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. மேலும், இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் சட்டம் - ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    பத்மாவதி படத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் ருபானி, போராட்டம் நடத்துபவர்களுக்கு பத்மாவதி படக்குழுவினர் அதை திரையிட்டு காட்டி, பிரச்சனையை தீர்த்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான போராட்டம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்திற்கு தீர்வு ஏற்படும் வரையில் அந்த படத்தை இங்கு திரையிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
    Next Story
    ×