search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ராணுவ அதிகாரி பேட்டி
    X

    காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: ராணுவ அதிகாரி பேட்டி

    காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரி ஜே.எஸ்.சந்து தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரி ஜே.எஸ்.சந்து தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊடுருவ செய்து வரும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் தீவிரவாத நிதி இப்போது முடங்கியுள்ளது. பயங்கரவாத நிதியகம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகளை கைது செய்து, விசாரித்து வருகிறது. மேலும், ராணுவம், மத்திய ரிசர்வ் படைகள் மற்றும் மாநில போலீஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே, காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ராணுவ படைப்பிரிவு தலைமை அதிகாரி ஜே.எஸ்.சந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இளைஞர்கள் தீவிரவாத பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிரவாதிகள் அழிக்கப்பட்டது காஷ்மீர் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆண்டு காஷ்மீரில் எண்ணற்ற தீவிரவாத வேட்டைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 190 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். 190 பேரில் 66 பேர், ஊடுருவல் முயற்சியின்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கொல்லப்பட்டவர்கள். மீதி 124 பேர், உட்புற பகுதியில் கொல்லப்பட்டது, நிலைமையை பெருமளவு மாற்றி உள்ளது. காஷ்மீர் பகுதியில் இன்னும் 200 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×