search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தல்: 36 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்: 36 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

    குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட பா.ஜ.க தலைமை இன்று 36 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட பா.ஜ.க தலைமை இன்று 36 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.


    182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

    முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. 


    டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில்  குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மேலிட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில், 70 தொகுதிகளுக்கான முதல் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. முதல் மந்திரி விஜய் ருபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல் மந்திரி நிதின்பாய் பட்டேல் மெஹ்சானா தொகுதியில் போட்டியிடுகிறார். 

    மீதமுள்ள 112 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 36 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
    Next Story
    ×