search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்.
    X
    கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்.

    திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட எதிர்ப்பு: குடகு மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

    திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து குடகு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவுக்கு பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் மைசூரு, குடகு, சித்தரதுர்கா, தாவணகரே, பெலகாவி, யாதகிரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 11 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடகு மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இன்று காலை ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் ஓடின. அந்த பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள்.

    இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. குடகு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. குடகு மாவட்டத்திற்குட்பட்ட மடிகேரி, சித்தாபுரா, வீராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரோடுகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. திப்பு சுல்தான் ஜெயந்தி விழா தடுத்தால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஒருபுறம் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடந்தாலும், மறுபுறம் இந்த விழாவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகிறது.




    Next Story
    ×