search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. என்பது கிரேட்டஸ்ட் செல்பிஷ் டேக்ஸ் - மம்தா பானர்ஜி சாடல்
    X

    ஜி.எஸ்.டி. என்பது கிரேட்டஸ்ட் செல்பிஷ் டேக்ஸ் - மம்தா பானர்ஜி சாடல்

    நரேந்திர மோடியின் ஜி.எஸ்.டி. திட்டத்தை கிரேட்டஸ்ட் செல்பிஷ் டேக்ஸ் என மேற்கு வங்காள மாநிலம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தாக்கி பேசியுள்ளார்.
    கொல்கத்தா:

    நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த திட்டங்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தமும் ஒன்று.



    இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி என்பது கிரேட்டஸ்ட் செல்பிஷ் டேக்ஸ் என கருத்து தெரிவித்துள்ளார்.

    “ஜி.எஸ்.டி. வரி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடுகிறது. அவர்களின் தொழில் மற்றும் பணிகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது மிகப்பெரிய தோல்வியாகும்.

    பணமதிப்பிழப்பு  மிகப்பெரிய பேரிடராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்” என மம்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கருப்பு நிற சதுரத்தை புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.



    திரிமுணால் கட்சியினர்  நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×