search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் பணக்கார கட்சி: ரூ.893 கோடி சொத்துமதிப்புடன் பா.ஜ.க. முதலிடம்
    X

    இந்தியாவின் பணக்கார கட்சி: ரூ.893 கோடி சொத்துமதிப்புடன் பா.ஜ.க. முதலிடம்

    அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா: 

    இந்தியாவின் அரசியல் கட்சிகளின் சொத்துமதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    முதலிடத்தில் இருக்கும் பா.ஜ சொத்து மதிப்பு ரூ.893 கோடியாக உயர்ந்துள்ளது. 2004-05ம் நிதி ஆண்டில் பா.ஜனதாவின் சொத்து மதிப்பு ரூ.122 கோடியே 93 லட்சமாக இருந்தது. அது, 2015-16ம் நிதி ஆண்டில் ரூ.893 கோடியே 88  லட்சமாக உயர்ந்துள்ளது. காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.167 கோடியே 35 லட்சத்தில் இருந்து ரூ.758 கோடியே 79 லட்சமாக உயர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.43 கோடியே 9 லட்சத்தில் இருந்து ரூ.559 கோடியாக உயர்ந்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.90 கோடியே 55 லட்சத்தில் இருந்து ரூ.437 கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 56 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியே 18 லட்சமாக அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரசின் சொத்து மதிப்பு வெறும் 25 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.44 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது. தேசியவாத காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் இருந்து ரூ.14 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×