search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலவரம் திட்டம்: மத்திய மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்தார் ஆந்திர முதல் மந்திரி
    X

    போலவரம் திட்டம்: மத்திய மந்திரி நிதின் கட்காரியை நேரில் சந்தித்தார் ஆந்திர முதல் மந்திரி

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள போலவரம் நீர்ப்பாசனம் திட்டம் தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரியை முதல் மந்திரி சந்திரபாபு சந்தித்து பேசியுள்ளார்.
    நாக்பூர்:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள போலவரம் நீர்ப்பாசனம் திட்டம் தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரியை முதல் மந்திரி சந்திரபாபு சந்தித்து பேசியுள்ளார்.

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் போலவரத்தில் நீர்ப்பாசனத்துக்காக அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி போலவரத்தில் நடைபெறவுள்ள பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவடைந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என கூறினார்.

    இந்நிலையில், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நேற்று மராட்டிய மாநிலத்துக்கு சென்றார். நாக்பூருக்கு சென்ற சந்திரபாபு, மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர், சந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளேன், அதனால் போலவரம் திட்டம்  தொடர்பாக பேசவே இங்கு வந்தேன். திட்டம் தொடர்பான முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன். விரைவில் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என மந்திரியிடம் வலியுறுத்தினேன். திட்டம் நிறைவேறுவதற்கு வேண்டிய உதவிகளை செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
    அவரும் இந்த திட்டத்தை முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×