search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறல்
    X

    ஜம்மு-காஷ்மீர்: அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுபாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் மற்றும் மாநில போலீசாரும் பலியாகினர்.

    இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் படையினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி நேற்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்க்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் படையினருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×