search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவராத்திரி பண்டிகை: ஆம்பர் அரண்மனையில் யானை சவாரி ரத்து
    X

    நவராத்திரி பண்டிகை: ஆம்பர் அரண்மனையில் யானை சவாரி ரத்து

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம்பர் அரண்மனையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு யானை சவாரி இன்று முதல் இந்த மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் அரண்மனையில் புகழ் பெற்ற ஷீலா தேவி கோவில் மற்றும் ஜலேப் சவுக் வளாகத்தில் மக்கள் யானையில் சவாரி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த மாதம் நவராத்திரி பண்டிகையின் காரணமாக இன்று முதல் இந்த மாதம் இறுதி வரை யானை சவாரி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இரவு நடத்தப்படும் ஒலி-ஒளி நிகழ்ச்சி வழக்கம் போல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை யானை சவாரி தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

    இதற்கிடையில், உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ம் தேதி ஆம்பர் அரண்மனைக்கு செல்வதற்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×