search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்டிகை காலங்களில் ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்தாகிறது?
    X

    பண்டிகை காலங்களில் ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்தாகிறது?

    பண்டிகை காலங்களில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    புதுடெல்லி:

    பண்டிகை காலங்களில் ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    இது தொடர்பாக ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த 40 நாட்களில் வருகின்றன. இதையொட்டி அக்டோபர் 15-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை புதிய ரெயில்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் 3800 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டில் 4000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    மேலும் பண்டிகை காலங்களில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ரெயில்வே ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கிறோம். பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×