search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராய்-யின் புதிய விதிமுறையால் செல்போன் அழைப்புக்கட்டணம் குறைய வாய்ப்பு
    X

    டிராய்-யின் புதிய விதிமுறையால் செல்போன் அழைப்புக்கட்டணம் குறைய வாய்ப்பு

    ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கு தொடர்பு கொள்ளும் போது நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணம் குறைக்கக்கப்பட்டுள்ளதால் செல்போன் அழைப்புக்கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    மொபைல் போனில் ஒரு நெட்வொர்க்கின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கின் சிம்கார்டுக்கு பேசும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை 14 காசுகளாக இருந்த இக்கட்டணம், 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ இதை அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த இணைப்பு கட்டணம் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிராய்-யின் புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×