search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பங்களா என மாற்றம் பெறுகிறது மேற்குவங்க மாநிலம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
    X

    பங்களா என மாற்றம் பெறுகிறது மேற்குவங்க மாநிலம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

    மேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த தீர்மானம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கான முதல் தீர்மானம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆங்கிலத்தில் 'பெங்கால்', பெங்காலியில் 'பங்களா', இந்தியில் 'பங்கால்' என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

    ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன. மூன்று பெயர்கள் வைப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கும் என அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பெயர் மாற்றம் தொடர்பான அமைச்சரவை கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மொழிகளிலும் பங்களா என ஒரே பெயரில் அழைக்க முடிவெடிக்கப்பட்டது.

    இதையடுத்து, இதுதொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப திட்டமிட்டிருப்பதாக இருப்பதாக மேற்குவங்க மாநில கல்வி மந்திரியான பார்த்தா சட்டர்ஜீ செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.



    Next Story
    ×