search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துங்கள்: யோகி ஆதித்யநாத்துக்கு மோகன் பகவத் வலியுறுத்தல்
    X

    உ.பி.யில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துங்கள்: யோகி ஆதித்யநாத்துக்கு மோகன் பகவத் வலியுறுத்தல்

    உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தும்படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.
    விருந்தாவன்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சாதி மோதல்கள், கற்பழிப்புகள், படுகொலைகள், கவுரவ கொலைகள் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையுடன் சமீபத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்த விவகாரம், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் இணைந்த பா.ஜ.க. உள்ளிட்ட 35 அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் விருந்தாவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் மூத்த நிர்வாகிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத்மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனையின்போது, மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் யோகிக்கு மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.

    கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது குறித்து கவலை தெரிவித்த மோகன் பகவத், இதுபோன்ற சம்பங்களால் எதிர்காலத்தில் அரசின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாத படி நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் யோகியிடம் எடுத்துக் கூறினார்.

    கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களை மாநில அரசுகள் ஊக்குவிப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×