search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேள்விகள் கேட்பதை விரும்பாத மோடி: பா.ஜ.க. எம்.பி. பகீர் தகவல்
    X

    கேள்விகள் கேட்பதை விரும்பாத மோடி: பா.ஜ.க. எம்.பி. பகீர் தகவல்

    கேள்விகள் கேட்பதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று பாஜக எம்.பி. கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாக்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பான நிகழ்ச்சியில், பா.ஜ.க. எம்.பி நானா படோல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்வதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார். பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தின் போது ஓபிசி  அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபப்பட்டார். மோடியிடம் நீங்கள் கேள்வி எழுப்பும் போது, அவர் உங்களிடம் பா.ஜ.க.வின் சித்தாந்தம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிந்து உள்ளீர்களா? என கேட்பார்.

    எம்.பி.க்கள் கூட்டத்தின் போது, பசுமை வரி, ஓபிசி அமைச்சகம், விவசாயத் துறையில் அதிக முதலீடு உள்ளிட்டவை பற்றி நான் சில பரிந்துரைகளை வழங்கினேன். இதனால், ஆத்திரம் அடைந்த மோடி, அமைதியாக இருக்குமாறு என்னிடம் கூறினார். மோடி எம்.பி.க்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், கேள்விகள் எழுப்படுவதை அவர் விரும்புவதில்லை” என்றார்.

    பாரதீய ஜனதா எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடி எம்.பி படோலை கண்டித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மேற்கண்டவாறு படோல் பேசியுள்ளார்.

    இதேபோல் மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசையும் நானா படோல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
    Next Story
    ×