search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்’: கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பேட்டி
    X

    ‘நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்’: கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பேட்டி

    குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். நியாயத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    சண்டிகார்:

    தேரா சச்சா சவுதா அமைப்பின் மத தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 2 பெண்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் 73 வயது தாயார் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி சிரித்த முகத்துடன் பேட்டி அளித்தார்.

    அப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் நான் நீதியின் மீதும், நியாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்து இருந்தேன். அது பழித்து விட்டது என்றார்.

    இவரது ஒரே மகன் தனது தங்கை கற்பழிக்கப்பட்டது குறித்து கடந்த 2002-ம் ஆண்டில் பலரிடம் கடிதம் மூலம் எடுத்துரைத்து வந்தார். எனவே மதகுரு ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்கள் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    கற்பழிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மனைவி கண்ணீருடன் பேட்டி அளித்தார். அவர் கூறும் போது, இந்த தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கை வைக்க தூண்டுகோலாக உள்ளது. இந்த நாளில் எனது கணவர் இருந்து இருக்க வேண்டும்.

    எனது மாமனார் கடந்த 35 ஆண்டுகளாக கிராம தலைவராக இருந்தார். இந்த வழக்கில் நீதி கிடைக்க கோர்ட்டில் ஓய்வின்றி பாடுபட்டார். எனது கணவர் தேராசச்சா இயக்கத்துக்காக தன்னையே அர்ப்பணித்தவர். மத குருவுக்காக தனது வீட்டின் மாடியில் தனி அறையே கட்டி தந்தார். அங்குதான் அவர் முகாம் நடத்தினார். கற்பழிப்புக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதும் அவரை கொலை செய்து பிணத்தை வயலில் வீசிவிட்டனர்.

    எனது கணவர் கொலை செய்யப்பட்ட போது எனது மகனுக்கு 7 வயதும், மகளுக்கு 12 வயதும் நிரம்பியிருந்தது. மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இருந்தது என்றார்.

    Next Story
    ×