search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டாட்சி தத்துவத்தின் சாராம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு விளங்குகிறது - பிரதமர் மோடி
    X

    கூட்டாட்சி தத்துவத்தின் சாராம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு விளங்குகிறது - பிரதமர் மோடி

    கூட்டாட்சி தத்துவத்தின் சாராம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு விளங்குகிறது என 71-வது சுதந்தர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

    பின்னர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது:-

    நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. ஜிஎஸ்டி வரியால் நாடும், மக்களும் ஒன்றிணைந்து உள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தின் சாராம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு விளங்குகிறது. 

    பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை; நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும்.

    மங்கள்யான் திட்டத்தை 9 மாதத்தில் செயல்படுத்தி சாதனை. ஆனால், கடந்த ஆட்சியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற 42 ஆண்டுகள் தேவைப்பட்டன. துன்பங்கள் பல வந்தாலும், விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகள் படைத்து வருகின்றனர். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால், ஏராளமான இளைஞர்கள் சொந்த காலில் நின்று சுயதொழில் தொடங்கியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×