search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் சதிகாரர்: சீன பத்திரிகை குற்றச்சாட்டு
    X

    இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் சதிகாரர்: சீன பத்திரிகை குற்றச்சாட்டு

    இந்தியா- சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைக்கு அஜித் தோவல்தான் காரணம் என்றும் அவர் ஒரு சதிகாரர் என அந்நாட்டு அரசு நாளிதழில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் இந்தியா-சீனா எல்லை உள்ளது. இங்கு சீன படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. இதனால் இந்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள இந்திய படைகள் சீனாவுக்குள் அத்து மீறி நுழைந்திருப்பதாகவும் அவர்கள் உடனடியாக வெளியேறா விட்டால் தாக்குதல் நடத்துவோம் என்றும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

    மேலும் இது சம்பந்தமாக சீன வெளியுறவு மந்திரி வாங்-இ கூறும் போது, சீன படைகள் எதுவும் இந்திய பகுதிக்குள் நுழையவில்லை.

    ஆனால் இந்திய ராணுவத்தினர் சீன பகுதிக்குள் முகாமிட்டு இருக்கிறார்கள். இதை இந்திய அதிகாரிகளே ஒத்துக்கொண்டுள்ளனர். அந்த படை வெளியேறா விட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் சுற்றுப்பயணமாக சீனா செல்கிறார். நாளையும், நாளை மறுநாளும் சீனாவில் தங்கி இருக்கும் அவர், அங்கு நடைபெறும் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    மேலும் சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியாஜியை சந்தித்து தற்போது எல்லையில் நிலவும் பதட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த நிலையில் சீன அரசு சார்பில் நடத்தப்படும் கம்யூனிஸ்டு பத்திரிகையான குளோபல் டைம்ஸ்சில் அஜித் தோவல் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

    அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் தற்போது இந்தியா- சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சினைக்கு அஜித் தோவல்தான் காரணம். அவர் ஒரு சதிகாரர்.

    தோவல் இங்கு வருவதால் இந்த பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. மோதல் வேண்டாம் என்று நினைத்தால் இந்திய படைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×