search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிவுடன் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X

    பணிவுடன் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    நாட்டின் ஜனாதிபதியாக தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதவியை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
    புதுடெல்லி:

    பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக  இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

    பதவியேற்புக்கு பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர் பேசியதாவது:-

    மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன்.

    இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற உறுப்பினர்களுடன் சில விவகாரங்களில் உடன்பாடும் சில விவகாரங்களில் முரண்பாடும் ஏற்பட்டது உண்டு. ஆனால், ஒருவருக்கு மற்றவர் மரியாதை தருவது என்பதை இங்கே நாங்கள் கற்றுக் கொண்டோம்.

    முன்னேற்றத்துக்கு ஒருமைப்பாடு அவசியமானது பரந்த பன்முகத்தன்மை உடைய மக்களை கொண்டுள்ள நமது நாடு, என்பதை தொடர்ந்து நிலைநாட்டி வந்துள்ளது. அமைதியான நாடான இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு நாம் அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. முன்னேற்றம் என்பது நாட்டின் கடைக்கோடியையும் சென்றடைய வேண்டும்.

    இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இன்றைய உலகத்தில் இந்தியாவின் குரலுக்கு மதிப்பு உள்ளது. அனைத்து துறைகளிலும் வல்லமை பெற்ற நாடு என்னும் வகையில் நமது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது தலையாய பணியாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. ஆனால், அதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×