search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனி பஸ்
    X

    உத்தரபிரதேசத்தில் இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனி பஸ்

    உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனி பஸ்களை இயக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யனாத் உத்தரவிட்டுள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் சிறப்பு பஸ்களை இயக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யனாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த பஸ்கள் இளம் சிவப்பு (பிங்க்) நிறத்தில் இருக்கும். ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருக்கும். இவற்றில் ஆண்கள் பயணம் செய்ய முடியாது. பெண்களும், குழந்தைகளும் மட்டும் பயணம் செய்யலாம்.

    மாநிலம் முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் திட்டத்துக்கு மாநில அரசு நிதியுடன் மத்திய அரசின் உதவியும் பெறப்படுகிறது.

    டெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவர் கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசு பெண்கள் பாதுகாப்புக்காக தனி நிதியை உருவாக்கியது.

    அதில், தற்போது ரூ.1000 கோடி உள்ளது. அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை உத்தரபிரதேசத்தில் பெண்கள் பஸ் திட்டத்துக்காக வழங்குகின்றனர்.

    Next Story
    ×