search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் 23 அரசியல் படுகொலைகள், நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை: எடியூரப்பா குற்றச்சாட்டு
    X

    கர்நாடகத்தில் 23 அரசியல் படுகொலைகள், நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை: எடியூரப்பா குற்றச்சாட்டு

    கர்நாடக மாநிலத்தில் இதுவரை 23 அரசியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது, நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளது.
    பெங்களூர்:

    பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை காட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் இதுதொடர்பான புகாரை எழுப்பிய டி.ஐ.ஜி ரூபா ஆகியோர் இன்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    டிஐஜி ரூபா விவகாரத்தை பொறுத்தவரை, கர்நாடகத்தில் உள்ள மாநில அரசின் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறைக்குள் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறும் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. 

    போலீஸ் அதிகாரிகளின் அறிக்கைக்கு நடவடிக்கை எடுத்து, சிறையில் நடைபெறும் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு பதிலாக அவர்(டிஐஜி, ரூபா) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு நேர்மையான அதிகாரியும் உண்மையுடன் வெளியே பேசக் கூடாது என்று முதல்வர்(சித்தராமையா) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் இதுவரை 23 அரசியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. அனைக்கு கொலை வழக்குகளும் தேசிய புலனாய்வு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். மங்களூரில் உடனடியாக ஒரு தேசிய புலனாய்வு அலுவலகத்தை திறக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, எடியூரப்பா வீட்டில் போலீசார் நேற்று நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரசியல் பழி வாங்கும் விதமாக இந்த சோதனை நடைபெற்றதாக எடியூரப்பா புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×