search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கிய பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் காலமானார்
    X

    சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கிய பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் காலமானார்

    சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கியவரும், சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டு பெற்றவருமான பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் காலமானார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் 1990-களில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர் கே.பி.எஸ்.கில்(கன்வர் பால் சிங் கில்). இவர், அப்போது பஞ்சாப் மாநிலத்தில் வளர்ந்து வந்த சீக்கிய தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து கட்டியவர் என்ற பாராட்டுக்குரியவர். 

    சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டு பெற்ற பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் தலைநகர் புதுடெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

    கில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

    ஐ.பி.எஸ் அதிகாரியான கில், 1995-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் பஞ்சாப் மாநிலத்தில் சிக்கலான சூழ்நிலை வரும் போது, அரசு அவரை அழைத்து ஆலோசனைகளை பெற்று வந்தது.



    2002-ம் ஆண்டு குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிந்தைய கலவரத்தை கட்டுப்படுத்த கில்லை பாதுகாப்பு ஆலோசகாரக நியமித்து இருந்தார்.

    அதேபோல், சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த கில்லின் அனுபவத்தை பெற்று வந்தார். இருப்பினும் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று முதல்வர் ராமன் சிங் மீது தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.
    Next Story
    ×