search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்திய 5 மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை
    X

    பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்திய 5 மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

    பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்திய 5 மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து முங்கர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் காரக்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேங்தா- லட்சுமியூர் சாலையில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு படை வீரர்கள் சோனே கவுடா, ரவீந்திர ராய் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் பிபின்மண்டல், அதிக்லால் பண்டிட், ரதுகோடா, பானு கோடா, மனு கோடா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் முங்கர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முங்கர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி ஸ்வரூப் ஸ்ரீவஸ்தவா முன்பு விசாரணைக்கு வந்தது.

    நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து மாவோயிஸ்டுகள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் 5 மாவோயிஸ்டுகளுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×