search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஊத்தங்கரை அருகே பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பகுதி நேர நியாயவிலை கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்குட்பட்டது ஆலமரத்தூர் கிராமம். ஒன்னகரை காப்பு காட்டு பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் சுமார் 750 பேர் வசிக்கிறார்கள். இவர்கள் விவசாயம், விசைத்தறி, மரம் ஏறுதல், கல் உடைத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. ஆனால் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் பொருட்கள் பொது விநியோக கடை 5 கிராமங்களில் பிரித்து வழங்கப்படுகிறது. ஆலமரத்தூரில் உள்ள மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்கு பொருட்களை பெற மேல்லக்கம் பட்டி, கீழ்லக்கம்பட்டி, பாவக்கல், வெப்பாலம்பட்டி, அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

    அனுமந்தீர்த்தத்துக்கு 5 கிலோ மீட்டரும், மற்ற ஊர்களுக்கு செல்ல 3 கிலோ மீட்டர் தூரமும் செல்ல வேண்டும். இந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் ரேசன் பொருட்களைப் பெற மிகவும் சிரமபட வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பகுதியில் மட்டும் 500 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இப்பகுதியில் நீராதாரமாக விளங்ககூடிய திறந்த வெளி கிணறு சுற்றுசுவர்கள் சேதமடைந்து உள்ளது. இதனை புதுப்பித்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதியை ஒட்டி ஒன்னகரை காப்புகாடு உள்ளதால் போதிய மின் வசதி இல்லை. மேலும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

    இப்பகுதியைச் சேர்நத் பச்சியம்மாள் (70) என்ற மூதாட்டி கூறும் போது, இப்பகுதியில் ஒரு பகுதி நேர நியாயவிலை கடை அமைத்துதர வேண்டும். இதற்கான கட்டிடமும் எங்கள் பகுதியில் உள்ளது. வனத்துறை மூலமாக கட்டித்தரப்பட்ட கட்டிடத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும்.

    மேலும் எங்கள் பகுதிக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. அவசர காலத்தில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இரண்டு சக்கர வாகனத்தில் தான் செல்ல வேண்டும். தெரு விளக்குகள் போதிய அளவில் இல்லை. தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்றார். #tamilnews
    Next Story
    ×