search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த வாரம் தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை மையம்
    X

    அடுத்த வாரம் தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை மையம்

    அடுத்த வாரம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்துவருகிறது. வானிலை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    குமரிக்கடல் முதல் கோவளம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. மேலும் அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் மெதுவாக நகர்ந்து வருகிறது.

    இது எந்த திசை நோக்கி செல்லும் என்று இப்போது கணிக்க முடியாது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் 11 செ.மீ.மழை பெய்துள்ளது. 2 நாட்கள் சில இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது.

    24, 25-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்யவாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பாபநாசம் 11 செ.மீ., சங்கரன்கோவில், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், கொடைக் கானல், தொழுதூர், சிவகாசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேரன்மகாதேவி, தாமரைப்பாக்கம் தலா 2 செ.மீ., காங் கேயம், திண்டுக்கல், கந்தர்வகோட்டை, மங்களாபுரம், திருக்கோவிலூர், நாகப்பட்டினம், விருதாச்சலம், மானா மதுரை, கிராண்ட் அணைக் கட்டு, தர்மபுரி, கழுகுமலை, கோவில்பட்டி, ஊத்தங்கரை, திருக்காட்டுப்பள்ளி, ராசிபுரம், மணிமுத்தாறு, திருச்சி விமான நிலையம், தர்மபுரி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
    Next Story
    ×