search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஒரே நாளில் 9 ஆயிரம் வீடுகளில் டெங்கு விழிப்புணர்வு
    X

    பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஒரே நாளில் 9 ஆயிரம் வீடுகளில் டெங்கு விழிப்புணர்வு

    கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஒரே நாளில் 9-ஆயிரம் வீடுகளுக்கு டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்றதை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ஒரே நாளில் 9-ஆயிரம் வீடுகளுக்கு டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்றதை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் ஈச்சனாரியில் உள்ள மென்பொருள் நிறுவனப் பணியாளர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் பரமசிவம் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து இப்பேரூராட்சியில் பணிபுரியும் 50 பணியாளர்கள் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த 450 பேர் என மொத்தம் 500 பேர் 18 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 25 நபர்கள் வீதம், இப்பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்களில் உள்ள 9-ஆயிரம் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், தேவைப்பட்ட இடங்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியிலும் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    இதற்கிடையில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் பெ.நா.பாளையம் காவல்நிலைய வளாகம், குடியிருப்பு வளாகம் போன்றவற்றை நேரடியாக ஆய்வு செய்தார். அதிக அளவில் வளர்ந்திருந்த புதர்களையும்,தேவையில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    பெ.நா.பாளையம் சரக டி.எஸ்.பி சீனிவாசலு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சாந்தகுமாரி, சுகாதார மேற்பார்வையாளர் ராம்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×