search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே வங்கி ஊழியர் வீட்டை உடைத்து 18 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    நாகர்கோவில் அருகே வங்கி ஊழியர் வீட்டை உடைத்து 18 பவுன் நகை-பணம் கொள்ளை

    நாகர்கோவில் அருகே வங்கி ஊழியர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை-பணம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் ஜீவா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் எழில்அரசன் (வயது 37). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சவுமியாஸ்ரீ. இவர் நாகர் கோவிலில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று எழில் அரசன் இரவு பணிக் காக சென்று இருந்தார். சவுமியாஸ்ரீ மதுரையில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.
    எழில் அரசனின் வீட்டின் மாடியில் வசித்துவந்தவர்கள் நேற்று காலை பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து எழில் அரசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக அங்கு விரைந்து வந்தார்.
    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.  இன்ஸ் பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை யர்களின் 2 கை ரேகைகள் சிக்கியது.
    மோப்ப நாயும் வரவழைக் கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழில் அரசன் பூதப்பாண்டி போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த அன்று எழில் அரசனும் அவரது மனைவி சவுமியாஸ்ரீயும் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் சிக்கிய கைரேகை கள் உதவியுடன் குற்றவாளி களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×