search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் 73 வங்கிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் 73 வங்கிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் 73 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தர்ணா போராட்டத்திலும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக் கடன்களை ரத்து செய்யாமல் அவற்றை வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணத்தை அதிகரிக்க கூடாது. வங்கி நிர்வாகங்கள் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். வராக்கடன்களை வசூலிக்க வழிகாட்டும் பாராளுமன்ற குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தவணை தவறிய கடன் நிலுவைத்தொகை வசூலிக்க கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். வங்கி நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கான தற்போது நிறுவப்பட்டுள்ள வங்கிகள் போர்டு பீரோ அமைப்பை கலைக்க வேண்டும்.

    வங்கிகளில் எல்லா நிலைகளிலும் கூடுதலாக புதிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழு வதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 73 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. நேற்று நடந்த அகில இந்திய அளவிலான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட மொத்தம் 419 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பலகோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு பல்வேறு கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவிற்கு பெரம்பலூர் கிளை வங்கி கிளை செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கிளை செயலாளர்கள் கிரி, செல்வராஜ், பிறைசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×