search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் சசிகலா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    தஞ்சையில் சசிகலா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அ.தி.மு.க அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அ.தி.மு.க அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை தஞ்சை ரெயிலடியில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

    தஞ்சை மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் வேங்கை கணேசன் முன்னிலை வகித்தார். ரெங்கசாமி எம்.எல்.ஏ பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவி. மனோகரன், ராஜேஸ்வரன், வட்ட செயலாளர் ராஜா, தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், அண்ணா தொழிலாளர் சங்க நிர்வாகி அமிர்தலிங்கம், முன்னாள் ஒன்றிய அமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு தொழில் விற்பனை பண்டகசாலை கோவிந்தராஜன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×