search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
    X

    பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன.
    கரூர்

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 190 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 590 மாணவர்களும், 6 ஆயிரத்து 417 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 7 பேர் எழுதியிருந்தனர். இதில் 6 ஆயிரத்து 204 மாணவர்களும், 6 ஆயிரத்து 179 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றிருந் தனர்.

    இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மதிப்பெண் சான் றிதழ் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகிக்கப்பட்டன.

    மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். அதனை மாணவ- மாணவிகள் வாங்கி ஆர்வமுடன் பார்வையிட்டனர். கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியை சண்முகவடிவு வழங்கினார். மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதி யை வேலை வாய்ப்பு அலு வலக பதிவு மேற்கொள்ள பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டன. பள்ளிகளில் வருகிற 9-ந்தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்பவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×