search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
    X

    மத்திய அரசின் பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

    நெல்லை மாவட்டத்தில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள், மத்திய அரசின் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்வி, கலை, வணிகம், தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகநலன், பொதுநலத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம பூ‌ஷன், பத்ம விபூ‌ஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவரால் இந்த விருதுகள் வழங்கப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 நகல்களுடன், பாளையங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை மாவட்ட பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூல மாகவோ வெள்ளிக்கிழமை (ஜூன் 23-ந்தேதி) மாலை 5 மணிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையில், தேர்வு செய்துள்ள பத்ம விருதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×