search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவ மழைக்கு வாய்ப்பு
    X

    தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவ மழைக்கு வாய்ப்பு

    தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவ மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை அந்தமான் கடல் பகுதியில் கடந்த வாரம் தொடங்கி இலங்கைக்கு பரவியது.

    இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.

    இதன் காரணமாக குமரி கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மேலும் பரவி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை ஓரிரு நாளில் தொடங்குகிறது.

    நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் லட்சத்தீவு மற்றும் வடக்கு, தெற்கு கர்நாடகம் கர்நாடக கடற்கரை பகுதியில் 30-ந்தேதி முதல் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் புதுவையில் மேல் அடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×