search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    30-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தகவல்
    X

    30-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தகவல்

    பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) இரண்டாம் தவணையாக வழங்கப்படவுள்ளது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரே நாளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) இரண்டாம் தவணையாக வழங்கப்படவுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட், பள்ளிக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் 24 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.

    இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4000 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர். நமது மாவட்டத்தில் சுமார் 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம் முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து குளிர் பதன பெட்டியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×