search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நவீன ஆவின் பாலகம்: கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நவீன ஆவின் பாலகம்: கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால் பண்ணை வளாகத்தில் நவீன ஆவின் பாலகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் பண்ணை வளாகத்தில் நவீன ஆவின் பாலகம், கால்நடை கலப்பு தீவன கிட்டங்கி, பால் குளிர்விப்பான் நிலையம் ஆகியவற்றின் தொடக்க விழா நடந்தது. இதில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு நவீன பாலகத்தை திறந்து வைத்தும், தலா ரூ.15 ஆயிரம் மதிப்பில் குளிர்விப்பான் பெட்டிகள் 2 நபர்களுக்கும், ஒரு நபருக்கு முகவருக்கான ஆணையினையும் வழங்கினார்.

    தமிழ்நாடு அரசு வேளாண் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அம்மா அவர்கள் பெண்களின் வாழ்வா தாரமும் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து இன்று ஏழை பெண்கள் சொந்த வருமானத்தில் வாழ வகை செய்துள்ளார்கள். இதன் மூலம் பால்வளம் பெருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

    அருப்புக்கோட்டை, சாத்தூர், திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளிலும், அனைத்து கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் ஏற்படுத்தப்படவுள்ளது. விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை இயக்குநர் காமராஜ், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., துணை பால் ஆணையர் சண்முகராஜ், ஆவின் பொது மேலாளர் சேகர், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், கலெக்டர் சிவஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் கண்ணன், ஆவின் துணைத்தலைவர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×