search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாம்பத்தியத்தில் பெண்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போக காரணம் என்ன?
    X

    தாம்பத்தியத்தில் பெண்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போக காரணம் என்ன?

    ஒரு குடும்பத்தில் கணவருக்கு தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு இருந்து, பெண்ணுக்கு இதில் நாட்டமில்லை என்றால் அந்த உறவு திசை திரும்பி போக அதிக வாய்ப்பு உள்ளது.
    ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் தாம்பத்தியத்தில் மிகக்குறைந்த அளவு மட்டுமே சுகத்தை அனுபவிக்கின்றனர். ஒரு சில பெண்கள் தாம்பத்தியத்தை அறவே வெறுக்கவும் செய்கின்றனர். ஒரு குடும்பத்தில் கணவருக்கு அதிக ஈடுபாடு இருந்து, பெண்ணுக்கு இதில் நாட்டமில்லை என்றால் அந்த உறவு திசை திரும்பி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    பெண்களுக்கு உடலுறவில் அதிக நாட்டமில்லாமல் போக ஹார்மோன்கள் மற்றும் மனநிலை ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த பகுதியில் பெண்களுக்கு உடலுறவில் நாட்டமில்லாமலும், குறைந்த இன்பம் ஆகியவற்றிக்கு காரணமான விஷயங்களை பற்றி இந்தப்பகுதியில் காணலாம்.

    உடல்பருமன் அதிகமாக இருப்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிகமான கொழுப்பு, மூச்சி விடுவதில் சிரமம், பாதுகாப்பின்மை போன்றவை மன அழுத்தத்தால் உண்டாகின்றன.

    தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடப்பது, உடல் பருமனை குறைத்து உங்களை உடலுறவில் சிறப்பாக செயல்பட வைக்கும்.

    சில பெண்கள் உடலுறவில் இன்பத்தை அனுபவிக்காமல் இருக்க உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள நிதி பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, அதிக உடல் எடை, வேலைச்சுமை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாமல் இருப்பதும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே போதிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

    கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனைகள், தேவையில்லாத கற்பனைகள் போன்றவற்றின் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு, உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் உறவில் அவசியம்.

    தினசரி உணவில் சரியான அளவு கொழுப்பு இருந்தாலே போதுமானது. அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுகளை உண்பதும் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
    Next Story
    ×