search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்..
    X

    உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்..

    உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் நாடியிருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே பொலிவு பெற செய்யலாம்.
    உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் நாடியிருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே பொலிவு பெற செய்யலாம்.

    * ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு சேர்க்கும்.

    * ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், உப்பு கலந்தும் உதட்டில் பூசி வரலாம். சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் ஜொலிக்கும்.

    * ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை கலந்து தொடர்ச்சியாக பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் மிளிரும்.



    * உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் பயன்படும். அதனை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவ வேண்டும்.

    * குங்குமப்பூ உதட்டின் கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * இஞ்சியும் உதடுக்கு பொலிவு சேர்க்கும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, இஞ்சி தூள், ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் குழப்பி முகத்தில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடு மிருதுவாக காட்சியளிக்கும்.
    Next Story
    ×