search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்

    குழந்தைகளுக்கு மதிய உணவு கலர்ஃபுல்லாகவும், சுவையாகவும் செய்து கொடுக்க விரும்பினால் முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 6
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம்
    பெரிய வெங்காயம் - 2 + 1
    பச்சை மிளகாய் - 1
    முட்டை - 3
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    லெமன் ஜூஸ் - சிறிதளவு,
    மிளகு தூள் - 2  ஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கி 2 வெங்காயத்தையும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.

    முட்டை வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

    தட்டில் ஒரு சப்பாத்திவை வைத்து அதன் நடுவில் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் லெமன் ஜூஸ் கலந்த வெங்காயத்தை தூவி ரோல் செய்யவும். இவ்வாறு அனைத்து சப்பாத்திகளிலும் செய்யவும்.

    சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×