search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி
    X

    தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி

    பள்ளி, அலுவலகம் செல்பவர்களுக்கு மதியத்திற்கு செய்து கொடுக்க இந்த தேங்காய் பால் புலாவ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    தேங்காய் பால் - 2 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - 1 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையானது

    தாளிக்க :

    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பட்டை - 1 துண்டு



    செய்முறை :

    பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

    வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் கிராம்பு, ஏலக்காய் பட்டை மூன்றையும் போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து தேவையான உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

    அடுத்து அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தேங்காய் பால் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×