search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான இத்தாலியன் சீஸ் பாஸ்தா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான இத்தாலியன் சீஸ் பாஸ்தா

    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இத்தாலியன் சீஸ் பாஸ்தாவை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 100 கிராம்,
    வெங்காயம் - 100 கிராம்,
    குடை மிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா 1,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
    தக்காளி - 2,
    ஓரிகானோ - 2 டீஸ்பூன்,
    துருவிய சீஸ் - 1 கப்,
    பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1/4 கப்,
    துளசி இலை - 8.

    கலந்து பரிமாற...

    தக்காளி சாஸ் - 1/4 கப் (அல்லது) க்ரீம் - 1/4 கப்,
    மேலே தூவ சீஸ் - 1 கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடை மிளகாயை மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கனமான வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பாஸ்தாவைப் போட்டு உப்புப் போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வெந்ததும் குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடித்து எண்ணெய் தடவி வைக்கவும். அப்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்ததும் அதில் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அத்துடன் உப்புச் சேர்த்து வதக்கிய பின் தக்காளி, குடை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, வதக்கவும்.

    அடுத்து ஓரிகானோவில் பாதியை போட்டு வதக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், துளசி இலைகள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் பாஸ்தாவையும் போட்டு கலந்து, க்ரீம், தக்காளி சாஸ் சேர்த்து, துருவிய சீஸ் தூவி, மீதமுள்ள ஓரிகானோவையும் தூவிக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இத்தாலியன் சீஸ் பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×