search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் ஸ்டஃப்டு பூரி
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் ஸ்டஃப்டு பூரி

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் ஸ்டஃப்டு செய்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - ஒரு கப்,
    சிரோட்டி ரவை - 2 டீஸ்பூன்,
    இனிப்புச் சோளம் - 2,
    இஞ்சி - பூண்டு விழுது - சிறிது,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, ரவை ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாக பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    சோளத்தை உதிர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த சோளத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.

    பிசைந்து வைத்துள்ள மாவில் சிறுகிண்ணம் போலச் செய்து, சோளக் கலவையை உள்ளே வைத்து சிறு பூரிகளாகத் திரட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்தெடுத்து சூடாகச் சாப்பிடவும்.

    சூப்பரான கார்ன் ஸ்டஃப்டு பூரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×