search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ்
    X

    சூப்பரான மதிய உணவு சோயா ரைஸ்

    பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவு. இன்று இந்த சோயா ரைஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    மீல்மேக்கர் - 1/2 கப்,
    காய்ந்தமிளகாய் - 3,
    கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

    தாளிக்க...

    பட்டை - சிறிய துண்டு,
    லவங்கம் - 2,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    காய்ந்தமிளகாயை, 1/2 கப் வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அனைத்து நன்றாக சேர்ந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×