search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து மாவு அடை செய்வது எப்படி?
    X

    சத்து மாவு அடை செய்வது எப்படி?

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்து மாவு நல்லது. இன்று சத்து மாவில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1 கப்
    ராஜ்மா - 1 கப்
    பாசிப்பருப்பு – 1 கப்
    உளுத்தம் பருப்பு – 1 கப்
    கொள்ளு – 1 கப்
    சோயா - 1 கப்
    வரமிளகாய் – 6
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 பெரியது
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, கொள்ளு, சோயா அனைத்தையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலையையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சூப்பரான சத்தான சத்து மாவு அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×