search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு
    X

    சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு

    காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சத்தான காராமணி கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - 200 கிராம்,
    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும்.

    தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வேக வைத்த காராமணியுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதை காராமணியில் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சத்தான காராமணி கூட்டு.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×