search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோர்வை போக்கும் நவதானிய கஞ்சி
    X

    சோர்வை போக்கும் நவதானிய கஞ்சி

    தினமும் நவதானிய கஞ்சி குடித்து வந்தால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். சோர்வே ஏற்படாது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை - அரை கப்,
    கேழ்வரகு - அரை கப்,
    பொட்டுக் கடலை - அரை கப்,
    பார்லி - அரை கப்,
    ஜவ்வரிசி - அரை கப்,
    பாசிப்பயறு - அரை கப்,
    கசகசா - கால் கப்,
    ஓமம் - ஒரு டீஸ்பூன்,
    பால் - 1 கப்.



    செய்முறை :

    கேழ்வரகை நன்றாக கழுவி காய வைக்கவும்.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் தனித்தனியே போட்டு வாசனை வரும் வரை வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து கொள்ளவும்.

    பொடித்த மாவை நன்றாக சலித்துவைத்துக் கொள்ளவும்.

    இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்த உடன் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கைவிடாமல் கிளறி விட வேண்டும்.

    கஞ்சி நன்றாக வெந்தவுடன் இறக்கி அதில் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.

    மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×