search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் வெஜிடபிள் ஸ்டூ
    X

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் வெஜிடபிள் ஸ்டூ

    வெஜிடபிள் ஸ்டூ ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி மற்றும் புட்டுக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். இன்று இந்த வெஜிடபிள் ஸ்டூ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பீன்ஸ் - 100 கிராம்,
    கேரட் - 100 கிராம்,
    பச்சைமிளகாய் - 5,
    உப்பு, கறிவேப்பிலை - தேவையானவை,
    தேங்காய்ப்பால் - 1 டம்ளர்.

    செய்முறை :

    காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய காய்கறிகளுடன், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவைக்கவும்.

    வேக வைத்த காய்கறிகளை மீண்டும் அடுப்பில் வைத்து சூடானதும் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெஜிடபிள் ஸ்டூ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×