search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சைடிஷ் கேரட் தயிர் பச்சடி
    X

    சத்தான சைடிஷ் கேரட் தயிர் பச்சடி

    சப்பாத்தி, பூரிக்கு சத்தான சைடிஷ் இந்த கேரட் தயிர் பச்சடி. இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த கேரட் தயிர் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தயிர் - 1 கப்
    கேரட் - 2
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - அரை டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    இஞ்சி - அரை டீஸ்பூன்
    உளுந்து - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை :

    * கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    * இஞ்சி, ப..மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, முட்டை அடித்துக் கலக்கும் கரண்டியால் க்ரீம் பதத்துக்கு அடித்துக் கலக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்த பின் அதில் கேரட் துருவல், சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

    * வதக்கிய கேரட் கலவையை தயிர்க்கலவையில் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

    * சத்தான கேரட் தயிர் பச்சடி ரெடி.

    * இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். அனைத்து காய்கறிகளிலும் இந்த பச்சடியை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×