search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரவில் ஏற்படும் மூக்கடைப்பு - எளிய வைத்தியங்கள்
    X

    இரவில் ஏற்படும் மூக்கடைப்பு - எளிய வைத்தியங்கள்

    மூக்கடைப்பானது நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும். இறுதியில் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முகத்தில் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

    இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.

    அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

    *  ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    * கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.

    * வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    * சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    * சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
    Next Story
    ×