search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்குமா?
    X

    கடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்குமா?

    கடற்கரை மணலில் நடப்பதும் ஓடுவதும் உங்கள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். மென்மையான கடற்கரை மணலில் ஓடுவதால் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.
    வெறும் கால்களுடன் மண்ணில் ஓடுவது ஆரோக்கியமானது. கடற்கரை மணலில் நடப்பதும் ஓடுவதும் உங்கள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். மென்மையான கடற்கரை மணல், ஸ்போர்ட்ஸ் உடலின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். மென்மையான கடற்கரை மணலில் ஓடுவதால் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.

    மென்மையான மணல் என்றால் உங்கள் கால்கள் அதற்குள் பதியும். அதனால் கடின மேற்பரப்பில் ஓடுவதுடன் ஒப்பிடுகையில், மென்மையான மணலில் ஓடுவதற்கு அதிக ஆற்றல் திறன் தேவை. காற்றுக்கு எதிராக கடற்கரை மணலில் ஓடும் போது, உங்களை திடமாக வைத்திருக்கும். அதே நேரம் கால்களின் வலு மற்றும் தாங்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.



    ஆரோக்கியமான மூட்டுக்கு மென்மையான கடற்கரை மணல் நல்லது. அதேப்போல் கால் மூட்டுகளுக்கு அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். குளிர்ந்த காற்று மற்றும் அழகிய இயற்கை காட்சியுடன் கடற்கரை மணலில் ஓடும் போது உங்கள் மனநிலை மேம்படும். கடற்கரையில் ஓடுவதால் ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாது, மனதும் அமைதி பெற்றும் மன அழுத்தம் நீங்கும்.

    கடற்கரையில் ஓடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடைப்பதோடு, மன ஆரோக்கியமும் மேம்படும். ஆனால் காயம் ஏற்பட்டவர்கள் கடற்கரையில் மணலில் ஓட பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். மேலும் அளவுக்கு அதிகமாக ஓட வேண்டாம். அதற்கு காரணம், கடற்கரை மணலில் ஓட அதிக ஆற்றல் தேவை.
    Next Story
    ×